இந்திய ராணுவத்தில் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு 249 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


ராணுவத்தில் 249 பணியிடங்கள் | இந்திய ராணுவத்தில் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு 249 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளில் ஒன்று எச்.கியூ. மெட்ராஸ் என்ஜினீயர் குரூப் அண்ட் சென்டர் பெங்களூரு. இந்த அமைப்பில் பாதுகாப்பு தொடர்பான அரசு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி தரத்திலான 249 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. அதிகபட்ச மாக பன்முக அலுவலர் பணிக்கு 60 பேரும், சலவைக்காரர் பணிக்கு 27 பேரும், முடி திருத்துனர் பணிக்கு 27 பேரும், சமையல் பணிக்கு 92 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எல்.டி.சி., ஸ்டோர் கீப்பர், டைப்ரைட்டர், டிரைவர், டெய்லர், சி.டி.. பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு இந்த வயது வரம்பு கணக்கிடப்படும். கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சுய சான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் The Civilian Establishment Officer, civilian Re-cruitment Cell, HQ MEG & Centre, Siven Chetty Garden Post, Bangalore 560042 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இதற்கான விளம்பர அறிவிப்பு 22-12-2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து 27 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். விண்ணப்பங்களை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.