மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆயுதக் கிடங்கில் பணி


ஆயுதக் கிடங்கில் பணி | மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ், ஏராளமான ராணுவ ஆயுதக் கிடங்குகள் செயல்படுகின்றன. சி/ஓ. 56 ஏ.பி.ஓ. என்ற ராணுவ ஆயுதக் கிடங்கு, இமாசல பிரதேசம், கின்னாவூர் என்ற இடத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த ஆயுதக் கிடங்கில் லோயர் டிவிஷன் கிளார்க், தீயணைப்பு வீரர், டிரேட்ஸ்மேன் போன்ற பணிகளுக்கு 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட உடல் தகுதி அவசியம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை டிசம்பர் 10-16 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.