AIIMS எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணியிடங்கள்


AIIMS எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணியிடங்கள் | எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் துணை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 122 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS ) என்று அழைக்கப்படுகிறது. மத்திய சுகாதார குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவ அறிவியல் மையங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது ரிஷிகேஷ் நகரில் செயல்படும் எய்ம்ஸ் மைய கிளையில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற 'டீச்சிங்' பிரிவு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 122 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 29 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 22 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 22 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 49 இடங்களும் உள்ளன. வயது வரம்பு, கல்வித்தகுதி... போன்ற விரிவான தகவல்களை www.aiimsrishikesh.edu.in இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண முறையில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து, தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்று நகல்களை இணைத்து, போபால் எய்ம்ஸ் மைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை 16.1.2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.