10-ம் வகுப்பு படித்தவர்கள் கடற்படையில் சேர்ப்பு | நாள்: 2-1-2017


10-ம் வகுப்பு படித்தவர்கள் கடற்படையில் சேர்ப்பு | இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்களும், 6-ம் வகுப்பு படித்தவர்களும் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வரு கிறார்கள். தற்போது சமையல் பணி மற்றும் சுகாதார பணிகளுக்கு தேவையான இளைஞர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களே. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றவர்களும், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களே. தேர்வு செய்யும் முறை: ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் திறந்திருக்கும் விண்ணப்பங்களை சரியான தகவல்களை கொண்டு பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினி பிரதி எடுத்து, அதில் ஒன்றில் புகைப்படம் ஒட்டி, சான்றொப்பமிட்டு... தேவையான சான்றிதழ்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பணிகளுக்கு ஏற்ப அனுப்பி வைக்கும் முகவரிகளும் மாறுகின்றன. முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-1-2017. விண்ணப்பங்கள் அலுவலகங்களுக்கு சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 9-1-2017. இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.