முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் | தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு | ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அடுத்த தேர்வு நடத்தவும் தயார் .


முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன. பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார். இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன


குரூப் 4-ல் 3,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PGT APPOINTMENT COUNSELLING | தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் (15,16-9-2017) சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்புமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்திய வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு பயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PGT APPOINTMENT COUNSELLING | புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்


புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17  மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 - 2017 - PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST


TRB POST GRADUATE ASSISTANTS PROVISIONAL SELECTED LIST DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS FOR THE YEAR 2016 - 2017 - PLEASE CLICK HERE FOR INDIVIDUAL QUERY, PROVISIONAL SELECTED LIST | Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I - 2016 - 2017 Provisional Selection List After Certiificate Verification As per the Notification No.03/2017 published on 09.05.2017, the corrigendum notification 03A/2017 issued on 30.05.2017 and the addendum issued on 30.06.2017 the Board conducted Written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical Education Directors Grade - I on 02.07.2017 and results were published on 11.08.2017. Board also conducted Certificate Verification for the same on 28.08.2017 and 29.08.2017. Now, the Board releases the Provisional Selection list for all subjects. The list is prepared based on Written Examination marks and weightage marks for Employment Exchange Seniority and Teaching Experience following merit-cum-Communal Rotation, as per rules in vogue. This selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras and Madurai Bench of Madras High Court. The appointment orders for the eligible candidates, satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process. Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.Click here for Individual Candidate Query Click here for Provisional List of Selected Candidates.

Click here for Individual Candidate Query

Click here for Provisional List of Selected Candidates  

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 - 2016 - PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET


TRB SPECIAL TEACHERS HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS IN SCHOOL EDUCATION AND OTHER DEPARTMENTS FOR THE YEAR 2012 - 2016 - PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012-2016vide Notification No.05/2017, dated 26.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examination does not mean that their application forms have been accepted by the Board. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. Some of the applications received by the board do not have the candidate's photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the form herein and fill in the details, affix a recent passport size colour photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size colour photograph. Utmost care has been taken in preparing the hall tickets and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in Click here to download the Hall-Ticket If there is no photograph in your Hall Ticket - Please Click here to download the form Click here - Press news

Click here to download the Hall-Ticket

If there is no photograph in your Hall Ticket - Please Click here to download the form

Click here - Press news

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB POLYTECHNIC HALL-TICKET DOWNLOAD | DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 - 18 - PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET


DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT.POLYTECHNIC COLLEGES 2017 - 18 - PLEASE CLICK HERE TO DOWNLOAD THE HALL-TICKET | Direct Recruitment of Lecturers in Government   Polytechnic Colleges 2017 -18 HALL TICKET TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examination does not mean that their application forms have been accepted by the Board. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. Some of the applications received by the board do not have the candidate's photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the form herein and fill in the details, affix a recent passport size colour photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size colour photograph. Utmost care has been taken in preparing the hall tickets and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in Click here to download the Hall-Ticket Click here for Press News If there is no photograph in your Hall Ticket - Please Click here to download the form

Click here to download the Hall-Ticket

Click here for Press News

If there is no photograph in your Hall Ticket - Please Click here to download the form

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download. ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 16.09.2017 அன்று நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத 1,70,363 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 01.09.2017 முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.TRB issued Notification for the Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 vide Advertisement No.06/2017, dated 28.07.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination. It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examination does not mean that their application forms have been accepted by the Board. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. Some of the applications received by the board do not have the candidate's photograph. The Board has provisionally admitted such candidates and uploaded their hall tickets without photograph. These candidates are advised to download the form herein and fill in the details, affix a recent passport size colour photograph and get it attested by a Gazetted Officer. The same must be handed over to the exam hall supervisor at the time of examination, along with a stamp size colour photograph. Utmost care has been taken in preparing the hall tickets and in publishing them.   

Click here to download the Hall-Ticket

If there is no photograph in your Hall Ticket - PleaseClick here to download the form

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE